Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd December 2024 17:09:15 Hours

புதிதாக நிலை உயர்வு பெற்ற இலங்கை சமிக்ஞை படையணியின் மேஜர் ஜெனரலுக்கு கெளரவிப்பு

புதிதாக நிலை உயர்வு பெற்ற தேசிய மாணவ சிப்பாய் படையணியின் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் ஜிஎஸ் பொன்சேகா யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களுக்கு இலங்கை சமிக்ஞை படையணி தலைமையகத்தில் 28 நவம்பர் 2024 கௌரவிப்பு மரியாதை வழங்கப்பட்டது.

வருகை தந்த சிரேஷ்ட அதிகாரிக்கு இராணுவ சம்பிரதாயத்திற்கு அமைய பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் அவர் வீரமரணம் அடைந்த இலங்கை சமிக்ஞை படையணியின் போர் வீரர்களுக்கு போர் வீரர்களின் நினைவுத்தூபியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டதை தொடர்ந்து குழு படம் எடுத்து கொண்டார்.

அதிகாரிகள் உணவகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசாரத்துடன் நிகழ்வு ஆரம்பமானது. இலங்கை இராணுவத்தின் பிரதான சமிக்ஞை அதிகாரியும் சமிக்ஞை படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஐஎச்எம்ஆர்கே ஹேரத் யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களை அலுவலகத்தில் சந்தித்தார்.

அதிகாரிகள் உணவகத்தில் ஏற்பாடுசெய்யப்பட்ட மதிய உணவுடன் நிகழ்வு நிறைவு பெற்றது, அதைத் தொடர்ந்து நினைவுச் சின்னங்கள் பரிமாற்றிகொள்ளபட்டன. நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.