Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd December 2024 17:08:35 Hours

14 வது இலங்கை சிங்கப் படையணியினரால் ஹுலனுகேயில் தேவைப்படும் குடும்பத்திற்காக புதிய வீடு

14 வது இலங்கை சிங்கப் படையணியின் பதில் கட்டளை அதிகாரியான மேஜர் எச்பீ பெரேரா அவர்களின் மேற்பார்வையின் 14 வது இலங்கை சிங்கப் படையணி படையினரால் ஹுலனுகேயில் ஆதரவற்ற குடும்பத்திற்காக புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டது.

242 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் கேபீஎல் அமுனுபுர ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ அவர்கள் பிரதம அதிதியாக வீடு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார். நிகழ்வில் பிரதம அதிதி 2024 நவம்பர் 26 அன்று பயனாளிக்கு வீட்டு சாவியை கையளித்தார்.

வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நிதியுதவியுடன் இந்த வீடு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

மேலும், லஹுகல மற்றும் ஹுலனுகே பிரதேசங்களில் வசிக்கும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான மகப்பேறு உதவிகளை விநியோகிக்கும் நிகழ்வு அறுகம்பே பே விஸ்டா ஹோட்டல் நிதியுதவியில் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.