03rd December 2024 10:10:43 Hours
வெளிசெல்லும் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் எஸ்எ குலதுங்கே ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களுக்கு பிரியாவிடை மரியாதை வழங்கும் நிகழ்வு 23 வது காலாட் படைப் பிரிவில் 30 நவம்பர் 2024 அன்று இடம்பெற்றது.
23 வது காலாட் படைப்பிரிவின் தளபதியினால் வழங்கப்பட்ட அன்பான வரவேற்புடனும், பிரிவின் படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து நிகழ்வு ஆரம்பமானது. இந்நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் தளபதி மரக்கன்று ஒன்றை நட்டு குழு படத்தில் இணைந்துகொண்டார்.
அனைத்து நிலையினருக்கான தேநீர் விருந்துபசாரத்தின் போது, அவர் தனது பதவிக்காலத்தில் பணியாளர்களின் ஆதரவு மற்றும் அர்ப்பணிப்புக்கு நன்றி தெரிவித்தார். அவருக்கு பாராட்டுச் சின்னமாக பல நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன. பிரியாவிடை மதிய உணவு மற்றும் அதிதிகள் பதிவேட்டு புத்தகத்தில் தனது கருத்துகளை பதிவிட்டதை தொடர்ந்து நிகழ்வு நிறைவு பெற்றது.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.