03rd December 2024 14:37:52 Hours
2024 நவம்பர் 22 அன்று பத்தரமுல்ல வாட்டர்ஸ் எட்ஜில் நடைபெற்ற டெக்னோ விருது இரவில் இலங்கை இராணுவம் மூன்று மதிப்புமிக்க விருதுகளைப் பெற்றுள்ளது. இந்த விருதுகள் 2024 ஒக்டோபர் 11 முதல் 13 வரை பிஎம்ஐசிஎச் இல் இலங்கை இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியர்ஸ் நடத்திய டெக்னோ கண்காட்சியில் முன்னர் காட்சிப்படுத்தப்பட்ட தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கான இராணுவத்தின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அங்கீகரித்து வழங்கப்பட்டது.
டெக்னோ கண்காட்சி தொழில் வல்லுநர்கள், பொறியாளர்கள் மற்றும் மாணவர்கள் தொழில்நுட்ப தீர்வுகளுடன் ஈடுபடுவதற்கான ஒரு தளமாக செயல்பட்டது. ஆராய்ச்சி மற்றும் கோட்பாடு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் டிஎன் மஜீத் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ ஐஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இராணுவ ஒருங்கிணைப்பில் பல்வேறு கண்காட்சிகள், இராணுவத்தின் காட்சியறை அதன் புதுமையான காட்சிகளுக்காக பரவலான கவனத்தை ஈர்த்ததுடன் பாதுகாப்பு மற்றும் சிவில் தொழில்நுட்பத்தில் அதன் இரட்டை நிபுணத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது..
விருது பெற்ற மூன்று கண்டுபிடிப்புகள்:
1. ஸ்மால் ஆர்ம் சிமுலேட்டர், மேஜர் எஸ்.ஆர்.ஆர் பீரிஸ் தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்டது. மேஜர் எச்.டீ. கமகே, மேஜர் டபிள்யூ.வி.என். விமலதேவ, மற்றும் கோப்ரல் கே.டி.பீ மதுசங்க மற்றும் கோப்ரல் ஆர்.ஐ அசங்க
2. தானியங்கி பிஎம்ஐ ஹிப்-டு-ரேடியோ மற்றும் மெட்டபாலிக் ரேடியோ அனலைசர், மேஜர் டிஎச்ஜேசி சோமதிலகே அவர்களால் உருவாக்கப்பட்டது.
3. ஆட்டோமொபைல் பில்டர் கிளீனிங் மெஷின், மேஜர் ஹெச்.பி கொலம்பகே மற்றும் ஏ.பி.எம்.டபிள்யூ கோப்ரல் பிரியங்க உள்ளிட்ட குழுவால் வடிவமைக்கப்பட்டது.