Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd December 2024 02:12:53 Hours

கெமுனு ஹேவா படையணியின் புதிய படைத்தளபதி பதவியேற்பு

51 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் டப்ளியூபிஜேகே விமலரத்ன ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ அவர்கள் கெமுனு ஹேவா படையணியின் 25 வது படைத்தளபதியாக 2024 நவம்பர் 18 அன்று படையணி தலைமையகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.

சங்கத்தினரின் பாராயணங்களுக்கு பின்னர், சிரேஷ்ட அதிகாரி தனது புதிய பதவியை ஏற்றுக்கொள்வதற்கான அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார்.

வருகை தந்த தளபதிக்கு 2024 நவம்பர் 23 அன்று பிரதான நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன் அணிவகுப்பு மைதானத்தில் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. தொடர்ந்து, வீரமரணம் அடைந்த போர் வீரர்களை நினைவு கூர்ந்த பின்னர் அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டு அனைத்து நிலையினருக்கும் உரையாற்றினார். படையணியின் புதிதாக நியமிக்கப்பட்ட படைத்தளபதி அவர்களை கௌரவிக்கும் வகையில் மதிய உணவுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.