02nd December 2024 14:38:41 Hours
மின்னேரிய காலாட் படை பயிற்சி நிலையத்தில் 2024 ஒக்டோபர் 9 மற்றும் நவம்பர் 20 ஆகிய திகதிகளில் இராணுவத்தினரின் மனநலம் மற்றும் நட்புறவை மேம்படுத்தும் வகையில் சிறப்பு பயிற்சி திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி காலாட் படை பயிற்சி நிலைய விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட்டதுடன், வெளிக்கள குழுவை உருவாக்கும் பயிற்சிகளைக் கொண்டிருந்ததுடன் சிவில் நிறுவனங்களைத் தழுவி ஒரு கட்டமைப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
ஒரு முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்பட்ட இந்த திட்டம் காலாட் படை பயிற்சி நிலையத்தில் கட்டளை அதிகாரியின் வழிகாட்டுதலின் கீழ் செயல்திறன் நெருக்கமாக கண்காணிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டது. இந்த முன்முயற்சி, குழுப்பணி மற்றும் அதன் பணியாளர்களிடையே திறமையை வளர்ப்பதில் காலாட் படை பயிற்சி நிலையத்தின் அர்ப்பணிப்பை இந்த முயற்சி அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந் நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிபயாள்கள் கலந்து கொண்டனர்.