Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd December 2024 14:45:41 Hours

விஜயபாகு காலாட் படையணியில் புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் கௌரவிப்பு

இராணுவ தலைமையக பயிற்சி பணிப்பகத்தின் புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் கேடிஎம்எல் சமரதிவாகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களுக்கு 30 நவம்பர் 2024 அன்று போயகனே விஜயபாகு காலாட் படையணியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

வருகை தந்த சிரேஷ்ட அதிகாரிக்கு இராணுவ சம்பிரதாயத்திற்கமைய பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து, போர் வீரர்கள் நினைவுச் சின்னம் மற்றும் பரமவீர வீர விபூசன (பீடபிள்யூவீ) நினைவு தூபியில் வீரமரணம் அடைந்த விஜயபாகு காலாட் படையணி போர் வீரர்களுக்கு மலர் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.

ஆண்கள் கழக இடம்பெற்ற அனைத்து நிலையினருக்கான தேநீர் விருந்துபசாரத்துக்கு பின்னர் விஜயபாகு காலாட் படையணியின் தளபதி சிரேஷ்ட அதிகாரிக்கு நினைவு சின்னம் வழங்கினார். மேஜர் ஜெனரல் கேடிஎம்எல் சமரதிவாகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் தனது உரையில், நிகழ்வை ஒழுங்கமைப்பதில் அவர்கள் எடுத்த முயற்சிகளுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.