Header

Sri Lanka Army

Defender of the Nation

01st December 2024 11:36:37 Hours

5 வது (தொ) கஜபா படையணி படையினர் மரதன்மடுவ குளக்கட்டினை சீரமைப்பு

5 வது (தொ) கஜபா படையணி படையினர் 2024 நவம்பர் 28 ஆம் திகதி சீரற்ற காலநிலை காரணமாக சிறிதளவு சேதமடைந்த கப்புகொல்லேவ மரதன்மடுவ குளக்கட்டை மணல் மூட்டைகளைப் பயன்படுத்தி மீட்டெடுத்தனர்.

21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.எஸ்.சி.கே வனசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டலில் 211 வது காலாட் பிரிகேட் மற்றும் 5 வது (தொ) கஜபா படையணி கட்டளை அதிகாரி அவர்களின் மேற்பார்வையின் கீழ் 5 வது (தொ) கஜபா படையணி படையினரால் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.