Header

Sri Lanka Army

Defender of the Nation

30th November 2024 14:20:31 Hours

10 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி படையினரால் பருத்திதுறை பாலம் புணரமைப்பு

10 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி படையினர் 52 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பீ ஆர் பத்திரவிதான யூஎஸ்ஏடப்ளியூசி பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் பருத்தித்துறை - வெற்றிலைகேணி வீதியிலுள்ள பாலம் ஒன்றினை நவம்பர் 2024 ஆம் திகதி புனரமைக்கும் பணியை மேற்கொண்டனர்.

522 வது காலாட் பிரிகேட் தளபதி மற்றும் 10 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி கட்டளை அதிகாரி ஆகியோரின் மேற்பார்வையில் இத்திட்டம், புதுக்காடு மருதங்கேணியை இணைக்கும் பாலத்தின் அத்திபார கட்டுமானம் மற்றும் பாதையை பலப்படுத்துவதில் கவனம் செலுத்தியது. பலத்த மழை இருந்தபோதிலும், படையினர் அயராது உழைத்து, கட்டமைப்பை வலுப்படுத்தவும், உள்ளூர் மக்களின் போக்குவரத்தை உறுதிப்படுத்தவும் 400 மணல் மூட்டைகளை அடுக்கி வைத்தனர்.