30th November 2024 14:26:45 Hours
பாதகமான காலநிலை காரணமாக ஹொரவ்பத்தான, பரங்கியவாடிய யான் ஓயா நீர்த்தேக்கத்திலிருந்து நீர் வெளியேற்றப்பட்டதால் ஏற்பட்ட அவசரநிலைக்கு பதிலளிக்கும் வகையில், 5 வது (தொ) கஜபா படையணி படையினர் 28 நவம்பர் 2024 அன்று வெள்ள நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜே.பீ.சி. பீரிஸ் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி அவர்களின் வழிகாட்டலின் கீழ் 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் 211 வது பிரிகேட் தளபதி ஆகியோரின் மேற்பார்வையில் படையினர் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு யுனி-பபல் வாகனங்களைப் பயன்படுத்தி வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் போக்குவரத்தை வழங்குவதன் உதவினர்.