Header

Sri Lanka Army

Defender of the Nation

30th November 2024 14:27:53 Hours

வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி முல்லைத்தீவில் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்பார்வை

வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜேபீசி பீரிஸ் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி அவர்கள் 2024 நவம்பர் 29 அன்று முல்லைத்தீவு 59வது காலாட் படைப்பிரிவின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார்.

அரசாங்க அதிகாரிகளுடன் இணைந்து படையினரால் வழங்கப்படும் நிவாரண சேவைகள் மற்றும் மனிதாபிமான உதவிகளின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.

தளபதி தனது விஜயத்தின் போது, சீரற்ற காலநிலை காரணமாக தடைப்பட்டிருந்த கட்டளை பிரதேசத்தின் வட்டுவாக்கல், பாலத்தின், போக்குவரத்து தொடர்பில் கவனம் செலுத்தினார். மேலும், கொக்கிளாய் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நிறுவப்பட்டுள்ள இடம்பெயர்ந்தோர் மையத்துக்குச் சென்ற அவர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராம மக்களின் நலம் குறித்து கேட்டறிந்தார்.