29th November 2024 19:14:12 Hours
பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்பீஏஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சீஎல்எஸ்சி அவர்கள் 22 நவம்பர் 2024 அன்று உடவலவ இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி தள பணிமனைக்கு விஜயம் மேற்கொண்டார்.
இராணுவ சம்பிரதாயத்திற்கு இணங்க, வருகை தந்த பிரதி பதிவி நிலை பிரதானிக்கு இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் அவர் வளாகத்தில் மரக்கன்று நாட்டியதுடன், தள பணிமனையின் படையினருக்கு உரையாற்றினார். அவர்களின் சாதனைகளை அங்கீகரித்து, சிறந்து விளங்குவதற்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்பை ஊக்குவித்த அவர் குழு படம் எடுத்துகொண்டார்.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த விஜயத்தில் கலந்து கொண்டனர்.