29th November 2024 19:09:12 Hours
11 (தெ) கஜபா படையணியின் படையினர் கடுமையான கனமழை காரணமாக உடைப்பெடுத்த பாலம்குளம் குளக்கட்டை சீரமைக்கும் பணியை முன்னெடுத்தனர். 55 வது காலாட் படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிஜீஎஸ் பெர்னாண்டோ யூஎஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ். 551 வது காலாட் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையில், படையினர் கனமழைக்கு மத்தியில் 300 மணல் மூட்டைகளை அடுக்கி, சுற்றுவட்டாரத்தில் ஏற்படக்கூடிய பேரழிவைத் தடுத்தனர்.