29th November 2024 19:12:57 Hours
23 வது விஜயபாகு காலாட் படையணி தனது 15வது ஆண்டு நிறைவு விழாவை 24 நவம்பர் 2024 அன்று 23 வது விஜயபாகு காலாட் படையணி முகாம் வளாகத்தில் இராணுவ சம்பிரதாயங்களுடன் கொண்டாடியது.
23 வது விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரிக்கு , ஆண்டு நிறைவு நாளில் முகாம் வளாகத்தில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், மாங்கன்று நாட்டிய அவர் குழு படம் எடுத்துகொண்டார். பின்னர் படையினருக்கு உரையாற்றியதை தொடர்ந்து, அனைத்து நிலையினருக்கான தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டார்.
ஆண்டு விழாவில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.