27th November 2024 12:28:52 Hours
இராணுவ மருத்துவ சேவைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் (வைத்தியர்) கேஜீகேஎச் விஜேவர்தன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 22 நவம்பர் 2024 அன்று கிளிநொச்சி இராணுவத் தள வைத்தியசாலைக்கு விஜயம் செய்து அதன் செயற்பாடுகள், செயற்திறன் தொடர்பான புதுப்பிப்புகளைப் பெற்றுகொண்டார்.
வருகை தந்த சிரேஷ்ட அதிகாரிக்கு சம்பிரதாய வாகன தொடரணிக்கு மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையின் கட்டளை அதிகாரியான மேஜர் (வைத்தியர்) சி. ஜெயசிங்க அவர்களால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். மருத்துவமனையின் திறன்கள் மற்றும் சேவைகள் தொடர்பான விரிவான விளக்கத்தையும் வழங்கினார், பின்னர் இராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு சுகாதார சேவையை வழங்குவதில் அதன் முக்கிய பங்கை எடுத்துக்காட்டினார்.
ஆய்வின் போது, பணிப்பாளர் வெளிநோயாளர் பிரிவு , அவசர சிகிச்சை பிரிவு, பல் பிரிவு, எக்ஸ் கதிர் பிரிவு, ஆய்வுகூடம், வெளிப்புற மருந்தகம், மற்றும் வார்டு வளாகம் உட்பட பல முக்கிய பகுதிகளை பார்வையிட்டார். 45 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனை, இராணுவத்தினர் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களின் நலனை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
விஜயத்தின் நிறைவில், இராணுவ மருத்துவ சேவைகள் பணிப்பாளர் அதிகாரிகள் உணவகத்தில் நடைபெற்ற தேநீர் விருந்தில் கலந்து கொண்டு அதிதிகள் பதிவேட்டு புத்தகத்தில் எண்ணங்களை பதிவிட்டார். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.