27th November 2024 12:40:25 Hours
புதிதாக நிலை உயர்வு பெற்ற 61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேடிபீ டி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களுக்கு 61 காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் பாராட்டு விழா 26 நவம்பர் 2024 அன்று ஏற்பாடு செய்தனர்.
புதிதாக நிலை உயர்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டதை தொடர்ந்து, 61 வது காலாட் படைப்பிரிவின் பிரதி தளபதி அவர்களால் வரவேற்கப்பட்டார். பின்னர், மரியாதை ஊர்வலம் இடம்பெற்றதுடன், தலைமையக வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்த அவர் குழு படம் எடுத்துகொண்டார். படையினருக்கு ஆற்றிய உரையில், சிரேஷ்ட அதிகாரி தனது 33 ஆண்டுகால இராணுவ வாழ்க்கை தொடர்பாக மேலும் எடுத்துரைத்தார். அதிகாரிகள் மற்றும் அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துடன் நிகழ்வு நிறைவு பெற்றது.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.