Header

Sri Lanka Army

Defender of the Nation

27th November 2024 12:44:53 Hours

23 வது காலாட் படைப்பிரிவின் படையினர் வெள்ள நிவாரண நடவடிக்கைகளில்

23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபீ காரியவசம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், பொலன்னறுவை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் கடுமையான வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக 23 வது காலாட் படைப்பிரிவின் படையினர் அனுப்பப்பட்டுள்ளனர். சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளத்தால் இப் பிரதேசம் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய மீட்புப் பணிகளிலும், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அனர்த்த நிவாரணங்களை வழங்குவதிலும் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.