Header

Sri Lanka Army

Defender of the Nation

26th November 2024 17:26:44 Hours

இராணுவ-சமூக ஒத்துழைப்பு மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு

143 வது காலாட் பிரிகேட் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 16 வது கஜபா படையணி கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ், 2024 நவம்பர் 24 அன்று கற்பிட்டி இலந்தையடி கடற்கரையை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும், தூய்மையான கடற்கரைப் பகுதிகளைப் பராமரிப்பதன் முக்கியத்துவம் குறித்த சமூக விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்கும், படையினர் மற்றும் சிவில் சமூகத்தினரிடையே சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு உணர்வை வளர்ப்பதற்கும் இந்த முயற்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

16வது கஜபா படையணியின் 3 அதிகாரிகள் மற்றும் 30 சிப்பாய்கள் இந் சமூக நலத்திட்டத்தில் பங்குபற்றினர்.