Header

Sri Lanka Army

Defender of the Nation

26th November 2024 19:45:34 Hours

மேற்கு தளபதி பனாகொட இராணுவ தள வைத்தியசாலை மற்றும் 1 வது இலங்கை இராணுவ போர் கருவி படையணிக்கு விஜயம்

மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2024 நவம்பர் 20 அன்று பனாகொட இராணுவ தள வைத்தியசாலை மற்றும் 1 வது இலங்கை இராணுவ போர் கருவி படையணிக்கு விஜயம் மேற்கொண்டார்.

மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியின் வாகன தொடரணிக்கு ஒவ்வொரு அமைப்பிலும் வழங்கப்பட்டதுடன் தொடர்ந்து சிரேஷ்ட அதிகாரிகளால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். பின்னர் அவர் குழு படம் எடுத்து கொண்டதுடன் தற்போதைய செயல்பாடுகள், தற்போதைய திட்டங்கள் மற்றும் செயல்பாட்டு பொறுப்புகள் பற்றிய விரிவான விளக்கங்கள் தளபதியும் பெற்றார்.

இந்த விஜயத்தின் போது, அவர் 1 வது இலங்கை இராணுவ போர் கருவி படையணி படையினருக்கு உரையாற்றியதுடன், இராணுவத்தின் கண்ணியம், சுய ஒழுக்கம் மற்றும் ஒருமைப்பாடு, சமூக மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றியமைத்தல் மற்றும் அவர்களின் கடமைகளில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை ஊக்குவித்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். பின்னர், வருகை தந்த தளபதி வருகையை நினைவுகூரும் வகையில் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் தனது எண்ணங்களை பதிவிட்டார்.

இவ் விஜயத்தில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.