26th November 2024 19:43:09 Hours
இலங்கை பெட்ரோலிய களஞ்சிய முனையத்தில் லிமிடெட் தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு பணியகம் மாகல்ல பெட்ரோலிய களஞ்சிய முனையத்தில் அவசர தீ பாதுகாப்பு ஒத்திகை 21 நவம்பர் 2024 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை 1030 மணி முதல் மதியம் 1230 மணி வரை மொத்த எண்ணெய் சேமிப்பு வசதிகளை உள்ளடக்கிய தீ அல்லது ஏனைய அவசரகால சூழ்நிலையில் தயார்நிலை மற்றும் பதிலளிப்பு திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த பயிற்சி இடம்பெற்றது.
இந்த ஒத்திகை 2 வது (தொ) கெமுனு ஹேவா படையணியின் 01 அதிகாரியும் 05 சிப்பாய்களை உள்ளடக்கிய குழுவினரின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்டது.
இதில் இலங்கை கடற்படை உறுப்பினர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். பயனுள்ள அவசரகால பதிலுக்கு தேவையான கூட்டு அணுகுமுறையை வலியுறுத்தி இப் பயிற்சி முன்னெடுக்கப்பட்டது.
அனைத்து பங்கேற்பாளர்களிடையே ஒருங்கிணைப்பு, தகவல் தொடர்பு மற்றும் தந்திரோபாய பதில்களை மேம்படுத்தவும் பல்வேறு தீ தொடர்பான அவசரகால சூழ்நிலைகளில் எப்படி கையாள்வது போன்றவை இந்த பயிற்சியில் இடம்பெற்றது.
இது உயிர் மற்றும் உடைமைக்கான அபாயங்களைக் குறைக்கும் அதே வேளையில் விரைவாகவும் திறமையாகவும் பதிலளிக்கும் திறனை செயற்படுத்தவதற்கான ஒத்திகையாகும்.