Header

Sri Lanka Army

Defender of the Nation

26th November 2024 19:45:05 Hours

2 வது பொறியியல் சேவைகள் படையணியினால் சிப்பாய்களுக்கான மின்பிறப்பாக்கி இயக்குனர் பாடநெறி

வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜேபீசி பீரிஸ் ஆர்டப்ளியூ ஆர்எஸ்பீ என்டிசி அவர்களின் வழிகாட்டலுக்கமைய 2 வது பொறியியல் சேவைகள் படையணியினால் மின்பிறப்பாக்கி இயக்குனர் பாடநெறி 2024 நவம்பர் 18 முதல் 30 வரை 2 வது பொறியியல் சேவைகள் படையணியில் நடைபெற்றது.

வன்னி பாதுகாப்பு படை தலைமையகத்திற்கு பொறுப்பான பகுதியில் உள்ள படைப்பிரிவுகள், பிரிகேட்கள், படையலகுகள் மற்றும் பயிற்சி பாடசாலைகளின் மின்பிறப்பாக்களை இயக்குவதற்கு பயிற்சி பெற்ற இயக்குபவர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக இந்த செயலமர்வு நடாத்தப்பட்டது.