26th November 2024 19:38:29 Hours
52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் 521 வது காலாட் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ் 21 நவம்பர் 2024 ம் திகதி நெல்லியடி மத்திய கல்லூரியில் நடைபெற்ற பாடசாலைகளின் அணிநடை அணிகள் பயிற்சிப் போட்டியின் நடுவர் குழுவில், 4 வது இலங்கை சிங்கப் படையணியின் ஒரு அதிகாரி மற்றும் 09 சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.
நெல்லியடி மற்றும் பருத்தித்துறை பிரதேச பாடசாலைகளின் அணிநடை அணிகள் இப்போட்டியில் பங்குபற்றியிருந்தன.
இந்நிகழ்வில் அதிகாரிகள், சிப்பாய்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.