Header

Sri Lanka Army

Defender of the Nation

26th November 2024 07:03:24 Hours

இராணுவத் தளபதிக்கு இராணுவ வழங்கலின் முக்கிய மதிப்புகள் வெளியீட்டின் முதல் நகல்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் திங்கட்கிழமை (25) அவரது அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது புதிதாக தொகுக்கப்பட்ட இராணுவ வழங்கல் முக்கிய மதிப்புகள் வெளியீட்டின் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். இராணுவ வழங்கல் படையணியினால் தயாரிக்கப்பட்ட வெளியீடு, இராணுவத்தில் வழங்கல் செயல்பாடுகளுக்கு வழிகாட்டும் முக்கிய மதிப்புகளை வலுப்படுத்தவும் தரப்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இராணுவக் குறியீடு எண்: 0409 A1 ஐக் கொண்ட வழங்கல் முக்கிய மதிப்புகள் வெளியீடு மற்றும் இராணுவத் தலைமையகத்தின் ஆராய்ச்சி மற்றும் கோட்பாடு பணிப்பகத்தின் அனுமதியுடன் வெளியிடப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்பீஏஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சீஎல்எஸ்சி மற்றும் வழங்கல் கட்டளை தளபதியும் இலங்கை இராணுவ போர்கருவி படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஈஎம்எம் பெர்னாண்டோ எச்டிஎம்சி எல்எஸசி ஏஏடீஓ ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வின் போது, பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள் இராணுவத் தளபதியிடம் வெளியீட்டின் முதற் பிரதியை முறைப்படி கையளித்தனர்.

இராணுவ வழங்கலின் முக்கிய மதிப்புகள் வெளியீடு இலங்கை இராணுவத்தின் வழங்கல் பணியாளர்களுக்கு ஒரு அத்தியாவசிய ஆதாரமாக செயல்படுகிறது. இராணுவத்தின் பணியை ஆதரிப்பதில் செயல்திறன், பொறுப்புக்கூறல் மற்றும் தொழில்முறை ஆகியவற்றை இராணுவத்தின் வழங்கல் நடவடிக்கைகளுக்கு வழிகாட்ட வேண்டிய அடிப்படைக் கோட்பாடுகள் மற்றும் மதிப்புகளை இது தனித்தனியாக கோடிட்டுக் காட்டுகிறது.

முதல் பிரதியை வழங்கியதைத் தொடர்ந்து, இராணுவத் தளபதி இந்த முயற்சிக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்ததுடன், வழங்கல் துறையில் இந்த முக்கிய மதிப்புகளைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். வழங்கல் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பிற தொடர்புடைய பணியாளர்கள் உட்பட பலதரப்பட்ட பயனர்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்த வெளியீடு இப்போது இலங்கை இராணுவத்தின் பல்வேறு கிளைகள் மற்றும் நிறுவனங்களில் விநியோகிக்கப்படுகின்றது.