26th November 2024 10:12:24 Hours
பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்பீஏஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சீஎல்எஸ்சி அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களால் 25 நவம்பர் 2024 அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார். 36 வருட கால சிறப்புமிக்க சேவையின் பின்னர் இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னதாக அவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
இந்த சந்திப்பின் போது, பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் போதும், போருக்குப் பிந்தைய காலத்திலும், தனது பதவிக்காலம் முழுவதும் பல்வேறு சவாலான பாத்திரங்களில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரியான செயல்திறனுக்காக இராணுவத் தளபதி சிரேஷ்ட அதிகாரிக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். அவரது குடும்பத்தினர் அவருக்கு பனிக்காலம் முழுவதும் ஆற்றிய முக்கிய பங்கையும் இராணுவத் தளபதி பாராட்டினார்.
பதிலுக்கு, மேஜர் ஜெனரல் எஸ்பீஏஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சீஎல்எஸ்சி அவர்கள் இராணுவத் தளபதி வழங்கிய உறுதியான வழிகாட்டலுக்கு நன்றியைத் தெரிவித்தார். கலந்துரையாடலின் முடிவில், இராணுவத் தளபதி ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு விசேட பாராட்டுச் சின்னமும் அவரது குடும்பத்தினருக்குப் பரிசுகளும் வழங்கினார்.
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம் இங்கே:
மேஜர் ஜெனரல் எஸ்.பீ.ஏ.ஐ.எம்.பி சமரகோன் எச்டிஎம்சி எல்எஸ்சீ அவர்கள் 1988 பெப்ரவரி 28 ஆம் திகதி இராணுவ நிரந்தர படையணியின் பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் பாடநெறி 29யில் அடிப்படை இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த அவர் இரண்டாம் லெப்டினன் நிலையில் 1989 டிசம்பர் 16 இல் இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணியில் நியமிக்கப்பட்டார். இராணுவத்தில் அவர் பணியாற்றிய காலத்தில் அடுத்தடுத்த நிலைகளுக்கு சீராக உயர்த்தப்பட்ட பின்னர், 2021 மே 07 அன்று மேஜர் ஜெனரலாக நிலை உயர்வு பெற்றார். சிரேஷ்ட அதிகாரி 2024 நவம்பர் 29 முதல் தனது 55 வது வயதில் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் இருந்து ஓய்வு பெறுகின்றார். ஒய்வு பெறும் போது சிரேஷ்ட அதிகாரி பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி படைத்தளபதியாகவும் பதவி வகிக்கின்றார்.
5 வது விஜயபாகு காலாட் படையலகு குழுகட்டளையாளர், இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி தலைமையக மோட்டார் போக்குவரத்து அதிகாரி, காலாட்படை பயிற்சி மையத்தின் அதிகாரி பயிற்றுவிப்பாளர், காலாட்படை பயிற்சி மையத்தின் அதிகாரி பயிற்றுவிப்பாளர், காலாட்படை பயிற்சி மையத்தின் நிறைவேற்று அதிகாரி, இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி கொழும்பு தள பணிமணையின் பணிமனை அதிகாரி, இராணுவ தலைமையக போர் கருவி பணிப்பக பணிநிலை அதிகாரி 3(தொழில்நுட்பம்), இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி உடவலவ தள பணிமணையின் பணிமனை அதிகாரி, மட்டக்களப்பு, வாழைச்சேனை மற்றும் அம்பாறை இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி களப் பணிமனைகளின் கட்டளை அதிகாரி, 3 வது இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி நடுத்தர பணிமனையின் கட்டளை அதிகாரி, 23 வது காலாட் படைப்பிரிவின் பணிநிலை அதிகாரி 2 (நிர்வாகம்), 5 வது இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி இரண்டாம் கட்டளை அதிகாரி, இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி அடிப்படை பட்டறை (கட்டுபெத்த) மற்றும் இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி (உடவலவ) மற்றும் 4 வது இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி, இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையலகு கட்டளை அதிகாரி ஐக்கிய நாடுகளின் பல பரிமானம் ஒருங்கிணைந்த நிலைப்படுத்தல் பணி ஹய்ட்டி, 4 வது இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி கட்டளை அதிகாரி, வடக்கு முன்னரங்க பராமரிப்பு பகுதி படையினர் கட்டளை அதிகாரி, இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி தலைமையக பதில் தளபதி மற்றும் இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி கொழும்பு தள பணிமனை தளபதி, இராணுவ தலைமையக மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பக பணிநிலை அதிகாரி 1, இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் தளபணிமனை கட்டளை தளபதி (உடவலவ), இராணுவ தலையைமக மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பக கேணல் (திட்டம்), இராணுவ வழங்கல் பாடசாலையின் தலைமை பயிற்றுவிப்பாளர், பாதுகாப்பு பதவி நிலை பிரதானி அலுவலக கேணல் (நிர்வாகம் மற்றும் வழங்கல்), மேற்கு பாதுகாப்பு படை தலைமையக கேணல் (நிர்வாகம் மற்றும் விடுதி), மேற்கு பாதுகாப்பு படை தலைமையக பிரிகேடியர் (நிர்வாகம் மற்றும் விடுதி), இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி நிலையதளபதி, இராணுவ தலைமையக மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பக பணிப்பாளர், இராணுவ தலைமையக தர நிர்ணய மற்றும் ஆய்வு பணிப்பகத்தின் பணிப்பாளர், இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி தளபதி, இராணுவ தலைமையக மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பக பணிப்பாளர் நாயகம், இராணுவ வழங்கல் கட்டளை தளபதி மற்றும் இராணுவ தலைமையகத்தின் பிரதி இராணுவ தளபதி உட்பட பல்வேறு முக்கிய நியமனங்களை அவர் தனது பணிக்காலம் முழுவதும் வகித்துள்ளார்.
அவர் தனது இராணுவ வாழ்க்கையின் போது, நவீன மோட்டார் வாகனத் தொழில்நுட்பப் பாடநெறி, உயர் ஆங்கில பாடநெறி,உளவியல் செயல்பாடுகள் பயிற்சி பாடநெறி (உடற்பயிற்சி சமநிலை நடை), படையலகு கட்டளை அதிகாரிகள் பாடநெறி, விளையாட்டு நிர்வாகிகள் பாடநெறி (இலங்கை தேசிய ஒலிம்பிக் குழு), இளம் தொழில்நுட்ப அதிகாரிகள் பாடநெறி (பாட எண். 48) – இந்தியா, பணிமனை குழு கட்டளை அதிகாரி பாடநெறி (பாடநெறி இல.43), வழங்கல் பணிநிலை பாடநெறி- பகிஸ்தான் (பாடநெறி இல.51), சிரேஷ்ட இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் அதிகாரிகள் பாடநெறி - இந்திய (பாடநெறி இல.93), தரை பீரங்கி பயிற்சி பராமரிப்பு மற்றும் திருத்தல் பாடநெறி - சீனா, உயர் பாதுகாப்பு முகாமை பாடநெறி (பாடநெறி எண் 11) – இந்தியா, உயர் பாதுகாப்பு மேலாண்மை பாடநெறி (பாட எண். 13) – இந்தியா, போன்ற பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பாடநெறிகளை பயின்றுள்ளார்.
மேலும் சிரேஷ்ட அதிகாரி, பாகிஸ்தானில் உள்ள அல்லாமா இக்பால் திறந்த பல்கலைக்கழகத்தில் வழங்கல் மற்றும் விநியோக முகாமைத்துவ சான்றிதழ், ஐசிஎம் (தகவல் கணினி மற்றும் முகாமைத்துவ) கணினி செயற்திட்ட சர்வதேச உயர் டிப்ளோமா சான்றிதழ் மற்றும் இந்தியாவில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பாடநெறி சான்றிதழ் ஆகியவற்றை பெற்றுள்ளார்.