25th November 2024 22:53:27 Hours
கம்பளை விக்கிரமபாகு தேசிய பாடசாலையின் 2023/2024 கல்வியாண்டுக்கான வர்ணவிழா 21 நவம்பர் 2024 அன்று பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.யு கொடித்துவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
வருகை தந்த தளபதியை அதிபர்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அன்புடன் வரவேற்றனர். பாடசாலை மாணவ சிப்பாய் படையணி குழுவினர் வழங்கிய மரியாதை அணிவகுப்பினை மதிப்பாய்வு செய்த பின்னர் பங்கேற்பாளர்களுடன் குழு படம் எடுத்துக்கொண்டார்.
விழாவில், பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் சிறந்து விளங்கும் 627 மாணவ, மாணவியருக்கு வர்ணங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.