Header

Sri Lanka Army

Defender of the Nation

25th November 2024 23:06:54 Hours

இயந்திரவியற் காலாட் படையணி படைத்தளபதி 4 வது இயந்திரவியற் காலாட் படையணிக்கு விஜயம்

21 வது காலாட் படைப்பிரிவு தளபதியும் இயந்திரவியற் காலாட் படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் டப்ளியூஎம்எஸ்சிகே வனசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 4 வது இயந்திரவியற் காலாட் படையணிக்கு 2024 நவம்பர் 23 அன்று விஜயம் மேற்கொண்டார்.

வருகை தந்த படைத்தளபதியை கட்டளை அதிகாரி மற்றும் அனைத்து படையினரும் வரவேற்றதுடன் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையும் வழங்கப்பட்டது. விஜயத்தின் நினைவாக முகாம் வளாகத்தில் மரக்கன்று ஒன்றினை படைத்தளபதி நாட்டினார்.

பின்னர், அவர் படையலகு படையினருக்கு உரையாற்றியதுடன் இயந்திரவியற் காலாட்படை வீரர்களின் முக்கியத்துவத்தையும் அவர்களின் தொழில் வளர்ச்சியையும் வலியுறுத்தினார். படையினரிடையே போதைப்பொருள் பழக்கம் மற்றும் இராணுவம் மற்றும் பொதுமக்கள் வாழ்வில் அதன் தாக்கம் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.