Header

Sri Lanka Army

Defender of the Nation

25th November 2024 22:44:28 Hours

புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல்களுக்கு அதிகார சின்னங்கள்

இராணுவத்தின் அண்மையில் நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல்கள் இன்று (25 நவம்பர் 2024) தளபதி அலுவலகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களுடனான மரியாதைக்குறிய சந்திப்பின் போது, தளபதியிடமிருந்து அதிகாரச் சின்னங்களையும் வாழ்த்துக்களையும் பெற்றுக்கொண்டனர்.

புதிதாக நிலை உயர்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரிகளில் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் மேஜர் ஜெனரல் கேஎன்டி கருணாபால ஆர்எஸ்பீ என்டியூ, இலங்கை சமிக்ஞைப் படையணியின் மேஜர் ஜெனரல் ஜீஎஸ் பொன்சேகா யூஎஸ்பீ பீஎஸ்சீ, இலங்கை பொறியியல் படையணியின் மேஜர் ஜெனரல் எஸ்பீஜீ கமகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ, கெமுனு ஹேவா படையணியின் மேஜர் ஜெனரல் எச்சீஎல் கலப்பத்தி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ, இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் மேஜர் ஜெனரல் கேடிபீ டி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, இலங்கை சிங்க படையணியின் மேஜர் ஜெனரல் எம்பீஎன்எ முத்துமால யூஎஸ்பீ பீஎஸ்சீ, விஜயபாகு காலாட் படையணியின் மேஜர் ஜெனரல் கேடிஎம்எல் சமரதிவாகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ, மற்றும் கெமுனு ஹேவா படையணியின் மேஜர் ஜெனரல் கேஜேஎன்எம்பீகே நவரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தேசத்தின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்த, புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல்களுக்கு இராணுவத் தளபதி தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தார்.

சுமுகமான உரையாடலுக்குப் பிறகு, இராணுவத் தளபதி அவர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு நட்சத்திர ஜெனரலுக்கான அதிகார வாளினை வழங்கினார். இது இரண்டு நட்சத்திர ஜெனரல்களாக அவர்களின் புதிய அதிகாரத்தைக் குறிக்கிறது. இராணுவத் தளபதியின் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்த அந்த அதிகாரிகள், நிகழ்வின் ஞாபகமாக படங்கள் எடுத்துக்கொண்டனர்.