Header

Sri Lanka Army

Defender of the Nation

24th November 2024 14:44:02 Hours

ஐக்கிய நாடுகளின் இராணுவ கண்காணிப்பாளர் பாடநெறி - 3 நிறைவு

ஐக்கிய நாடுகளின் இராணுவ கண்காணிப்பாளர் பாடநெறி – 3 சர்வதேச அமைதி நடவடிக்கை அமைப்பின் அனுசரணையில் 2024 நவம்பர் 22 ஆம் திகதி குகுலேகங்க இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் நிறைவடைந்தது.

இலங்கை இராணுவதின் 22 அதிகாரிகள், கடற்படையின் 2 அதிகாரிகள் விமானப்படையின் 2 பெண் அதிகாரிகள் , மங்கோலியாவின் ஒரு அதிகாரி, பீஜியின் ஒரு பெண் அதிகாரி என 29 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இந்த பாடநெறியில் பங்குபற்றினர். இக் குழுவில் சர்வதேச அமைதி நடவடிக்கை அமைப்பிலிருந்து 4 பாட விதான நிபுணர்கள் இருந்தனர். அணித் தலைவர், ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த திரு. ரோஜர் டேவிட் ஹியூஸ், டென்மார்க்கைச் சேர்ந்த திரு. ஜென்ஸ் வின்தர் ஆண்டர்சன், செர்பியாவைச் சேர்ந்த திரு. பிரானிஸ்லாவ் மிலேடிக் மற்றும் பங்களாதேசத்தைச் சேர்ந்த லெப்டினன் கேணல் ஏ.பி.யு தாரேக் முகமது ரஷீட் ஆகியோர் இக் குழாமில் உள்ளடங்குவர்.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை இராணுவத்தின் பொதுப்பணி பணிப்பாளர் நாயகமும் இராணுவ பொலிஸ் படையணியின் படைத்தளபதி கலந்து கொண்டு பங்குபற்றியவர்களுக்கு இறுதி உரையினை நிகழ்த்தினார். பயிற்சி பணிப்பகத்தின் அதிகாரபூர்வ பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் கேடிஎம்எல் சமரதிவாகர ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி, இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் தளபதி பிரிகேடியர் எஸ்ஏ ஹெட்டிகே ஆர்எஸ்பீ பீஎஸ்சி, பொறியியல் சேவைகள் பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் வைகேஎஸ் ரங்கிக பீஎஸ்சி பீடீஎஸ்சி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் பயிற்றுவிப்பாளர் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.