24th November 2024 14:50:22 Hours
மேற்குப பாதுகாப்பு படை தலையைமகம் அதன் 12 வது ஆண்டு நிறைவை 2024 நவம்பர் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் பனாகொடவில் உள்ள பாதுகாப்புப் படைத் தலைமையக வளாகத்தில் பல நிகழ்வுகளுடன் மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் பங்குபற்றலுடன் கொண்டாடியது.
12 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியின் பங்கேற்புடன் ஊழியர்கள், தாய்நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த போர்வீரர்கள் அவர்களது குடும்பத்தினருக்கும் ஆசி வேண்டி போதி பூஜை நிகழ்ச்சி 18 ஆம் திகதி (திங்கட்கிழமை) பனாகொட இராணுவ போதிராஜாராமய விகாரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
19 ஆம் திகதி காலை (செவ்வாய்கிழமை), 1 வது களப் பொறியியல் படையணி படையினர் தளபதிக்கு இராணுவ சாம்பிரதாய பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கி கெளரவித்தனர். வருகை தந்த தளபதியை பிரிகேடியர் பொதுப்பணி பிரிகேடியர் பிபீஜீகே பாலசூரிய ஆர்எஸ்பீ பீஎஸ்சி மற்றும் பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் விடுதி பிரிகேடியர் கே.எல் முனசிங்க யூஎஸ்பீ ஆகியோர் நுழைவாயிலில் அன்புடன் வரவேற்றனர்.
இராணுவ மரபுகளுக்கமைய அன்றைய தினத்தின் நினைவாக மேற்கு தளபதி அனைத்து நிலையினருடன் படம் எடுத்துகொண்டார்.
அதனைத் தொடர்ந்து, மேற்கு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி அவர்கள், மேற்கு பாதுகாப்புப் படை தலைமையக வளாகத்தில் மரக்கன்று நட்டு அன்றைய தினத்தின் பெறுமதியைக் நினைவு கூர்ந்தார். அதனைத் தொடர்ந்து, மேற்கு பாதுகாப்புப் படை தலைமையக தளபதியினால் 36 உலர் உணவுப் பொதிகளை மேற்கு பாதுகாப்புப் படை தலைமையக பணிபுரியும் சிவில் ஊழியர்களுக்கு வழங்கும் விசேட நலத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து தேநீர் விருந்தும் இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து மேற்கு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி சிவில் ஊழியர்கள் மற்றும் அனைத்து நிலையினருடனான மதிய விருந்துபசாரத்தில் கலந்துகொண்டார்.
அதைத் தொடர்ந்து, மேற்குத் தளபதி இந்த சிறப்பு நாளில் படையினருக்கு உரையாற்றியதுடன் அமைப்பின் பொதுவான இலக்கை அடைய அவர்களின் உற்சாகமான பங்களிப்பிற்காக பாராட்டினார்.
14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேஏடப்ளியூஎன்எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ, 57 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டப்ளியூஎம்பீஎம் விஜேசூரிய ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ, மேற்கு பாதுகாப்பு படை தலைமையக பிரிகேடியர் பொதுப்பணி பிரிகேடியர் பிபீஜீகே பாலசூரிய ஆர்எஸ்பீ பீஎஸ்சி, 61 வது காலாட் படைப்பிரிவின் பிரதி தளபதி பிரிகேடியர் டப்ளியூஎம்எல்எஸ் தயாவன்ச, மேற்கு பாதுகாப்பு படை தலைமையக பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் விடுதி பிரிகேடியர் கே.எல் முனசிங்க யூஎஸ்பீ, கட்டளை அதிகாரிகள், பணிநிலை அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் மேற்கு பாதுகாப்பு படை தலைமையக சிவில் ஊழியர்கள் ஆண்டு நிறைவு நிகழ்வுகளில் பங்கேற்றனர்.