24th November 2024 14:47:22 Hours
மேஜர் ஜெனரல் பிஜீஎஸ் பெர்னாண்டோ யூஎஸ்பீ எச்டிஎம்சி பீஎஸ்சி அவர்கள் 22 நவம்பர் 2024 அன்று கிளிநொச்சியில் உள்ள படைப்பிரிவு தலைமையகத்தில் நடைபெற்ற விழாவில் 55 வது காலாட்படை பிரிவின் 28 வது தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றார். வருகை தந்த தளபதியை பிரிகேட் தளபதிகள் மற்றும் பணிநிலை அதிகாரிகள் வரவேற்றதுடன் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை என்பவற்றினை தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகின.
சர்வமத அனுஷ்டானங்களில் கலந்துகொண்ட சிரேஷ்ட அதிகாரி உத்தியோகபூர்வமாக ஆவணத்தில் கையொப்பமிட்டு, கடமை ஏற்று அடையாளமாக பிரிவு வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நாட்டினார்.
பின்னர் இராணுவ மரபுகளுக்கமைய புதிய தளபதி அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு உரையாற்றினார். அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரத்துடன் நிகழ்வு நிறைவுற்றது.
பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், பணிநிலை அதிகாரிகள் மற்றும் 55 வது காலாட் படைப்பிரிவின் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.