Header

Sri Lanka Army

Defender of the Nation

24th November 2024 09:38:31 Hours

பயிற்சி பணிப்பகத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்திற்கு விஜயம்

பயிற்சி பணிப்பகத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் கேடிஎம்எல் சமரதிவாகர ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்கள் 2024 நவம்பர் 21 ஆம் திகதி இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்திற்கு வருகை தந்த பணிப்பாளர் நாயகத்தினை இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் தளபதி பிரிகேடியர் எஸ்ஏ ஹெட்டிகே ஆர்எஸ்பீ பீஎஸ்சி அவர்கள் அன்புடன் வரவேற்றார். அவரது வருகையின் நினைவாக, பயிற்சி நிறுவனத்தில் மரக்கன்று நாட்டப்பட்டது.

அதன்பிறகு, உலகளாவிய அமைதி நடவடிக்கைகள் திட்ட அனுசரனையில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகளின் இராணுவக் கண்காணிப்பாளர்களின் பாடநெறி எண். 3 இன் பாட விதான நிபுணர்களுடன் சிரேஷ்ட அதிகாரி உரையாடினார். பயிற்சிப் பணிப்பாளரான லெப்டினன் கேணல் ஜீஎச் அமிதா ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சி அவர்கள் களப் பயிற்சியின் நிலைமை குறித்து அவருக்கு விளக்கினார்.

பின்னர், இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவன தலைமை பயிற்றுவிப்பாளரான லெப்டினன் கேணல் எஸ்எஸ்ஏ விஜேரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் வழங்கிய இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனம் பற்றிய அறிமுக விளக்கக்காட்சியில் கலந்து கொண்டார். விளக்கக்காட்சியின் போது, நிறுவனத்தில் பயிற்சி வசதிகளின் தரத்தை மேம்படுத்துவதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.

இவ் விஜயத்தில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.