Header

Sri Lanka Army

Defender of the Nation

24th November 2024 09:21:42 Hours

இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி தொண்டர் படையணி பயிற்சி பாடசாலைக்கு விஜயம்

இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் பிகேஜிஎம்எல் ரொட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சி ஐஜீ அவர்கள் 2024 நவம்பர் 19 அன்று தொண்டர் படையணி பயிற்சி பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டார்.

வருகை தந்த தளபதியின் வாகன தொடரணிக்கு மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து நிகழ்வின் நினைவாக வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது. பின்னர் தொண்டர் படையணி பயிற்சி பாடசாலை தளபதி, தற்போதைய பயிற்சி நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்றங்கள் பற்றிய விளக்கத்தை வழங்கினார்.

வருகையின் போது, நிர்வாக உதவியாளர்களின் எழுதுவினைஞர் பாடநெறி சேர்ந்த மாணவர்கள் ஆவணப்பட நிகழ்ச்சி மூலம் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். தளபதியினால் அடிப்படை தகவல் தொழில்நுட்ப பாடநெறி மாணவர்களுக்கு எழுதுபொருட்கள் விநியோகிக்கப்பட்டதுடன், நிர்வாக உதவியாளர் பாடநெறியில் பங்குபற்றியவர்களுக்கு தேசிய தொழில்சார் தகுதிச் சான்றிதழ்களையும் வழங்கினார்.

அனைத்து நிலையினருக்கு உரையாற்றிய இராணுவ தொண்டர் படையணி தளபதி, இலங்கை இராணுவத்தின் திறன்களை மேம்படுத்துவதில் தொண்டர் படையணி பயிற்சி பாடசாலையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். தலைமைத்துவம், ஒருமைப்பாடு மற்றும் தொழில்முறை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், மீத்திறன் அதிகாரிகள் பாடநெறியின் அதிகாரிகளுக்கு அவர் உரையாற்றினார்.

அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரத்துடன் அன்றைய நிகழ்வுகள் நிறைவுபெற்றன. சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.