23rd November 2024 07:56:50 Hours
பொறியியல் சேவைகள் படையணியின் அதிகாரிகள் பயிற்சி நாள் 2024, ஊடக மற்றும் உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமும் இராணுவ ஊடக பேச்சாளரும் பொறியியல் சேவைகள் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கேஏஎன் ரசிக்க குமார என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 21 நவம்பர் 2024 அன்று நடத்தப்பட்டது.
உடற்பயிற்சியினை தொடர்ந்து அணிநடை மற்றும் வாள் பயிற்சியுடன் அன்றைய நிகழ்வுகள் ஆரம்பமாகின. "அலுவலக வேலைகளுடன் இராணுவ மதிப்பீட்டை எவ்வாறு இணைப்பது" என்ற தலைப்பில் விரிவுரை ஒன்று பொறியியல் சேவைகள் படையணி நிலைய தளபதி பிரிகேடியர் என்.டபிள்யூ.பீ.எஸ்.எம்.பெரேரா அவர்களினால் நிர்வாகப் பணிகளுடன் இராணுவத் துல்லியத்தை ஒருங்கிணைப்பதற்கான நடைமுறை அறிவினை நோக்கமாக கொண்டு வழங்கப்பட்டது.
கலாநிதி (பொறியாளர்) ரணில் ஷானக சுகததாசவின் "உந்துதல்" என்ற தலைப்பில் நடைபெற்ற ஒரு கவர்ச்சிகரமான விரிவுரை, பங்கேற்பாளர்களுக்கு உத்வேகத்தையும் ஊக்கத்தையும் அளித்தது.
இப் பயிற்சி நாளில் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் பங்குபற்றினர்.