23rd November 2024 08:05:23 Hours
7 வது இலங்கை பீரங்கி படையணி தனது 36வது ஆண்டு நிறைவை 7 வது இலங்கை பீரங்கி படையணி கட்டளை அதிகாரியின் வழிகாட்டுதலின் கீழ் கொண்டாடியது.
கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, 31 ஒக்டோபர் 2024 அன்று மின்னேரியா குளம் பகுதியிலும், ஏ11 ஹபரணை - மட்டக்களப்பு பிரதான வீதியிலும், ரொட்டவெவ சந்தியிலிருந்து முகாம் வளாகம் வரை சிரமதான பணி மேற்கொள்ளப்பட்டது. 2024நவம்பர் 7 அன்று, படையலகுகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றதுடன் அதைத் தொடர்ந்து 8 நவம்பர் 2024 அன்று மத அனுஷ்டானங்கள், மின்னேரிய தேவாலயத்தில் கொடி ஆசீர்வாதம் மற்றும் படையலகிற்கு ஆசீர்வாதம் வழங்க முகாம் வளாகத்தில் போதி பூஜை ஆகியவை இடம்பெற்றன.
10 நவம்பர் 2024 அன்று, கட்டளை அதிகாரிக்கு படையலகு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் முகாம் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு, குழு படம் மற்றும் அனைத்து நிலையினருடான மதிய உணவு என்பவற்றிலும் கலந்துக்கொண்டார். நிகழ்வுகளின் தொடர் 11 நவம்பர் 2024 அன்று ஒன்றுகூடலுடன் நிறைவடைந்தது.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.