23rd November 2024 08:02:50 Hours
யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியும் கஜபா படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் நவம்பர் 2012 அன்று கஜபா படையணியின் 14, 11 (தொ), மற்றும் 4 வது கஜபா படையணிகளுக்கு விஜயம் மேற்கொண்டார்.
ஒவ்வொரு படையலகிலும் வருகை தந்த சிரேஷ்ட அதிகாரிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, படையினருக்கான உரை மற்றும் கட்டளை அதிகாரிகளின் விளக்கங்கள் என்பன இடம்பெற்றன. பின்னர் சிரேஷ்ட அதிகாரி முகாம் வளாகத்தை பார்வையிட்டதுடன், மரக்கன்று நாட்டினார். விஜயத்தின் போது, தலைமைத்துவம், குழுப்பணி மற்றும் படையணியின் பெருமை ஆகியவற்றின் முக்கியத்துவம் தொடர்பில் கருத்து பகிர்ந்துக் கொண்டார்.
விஜயத்தின் நிறைவாக படைத்தளபதி அவர்கள் மடு மாதா தேவாலயத்திற்கு விஜயம் செய்தார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.