22nd November 2024 08:03:30 Hours
இந்திய அமைதி காக்கும் படையின் முன்னாள் அதிகாரிகள் குழுவினர் முல்லைத்தீவு 59 வது காலாட் படைப்பிரிவிற்கு அவர்களது குடும்பத்தாருடன் 2024 நவம்பர் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் விஜயம் மேற்கொண்டனர். இந்திய காலாட் படை பயிற்சி பாடசாலையின் தளபதி லெப்டினன் ஜெனரல் கஜேந்திர ஜோஷி, மோவ் மற்றும் முன்னாள் துணை இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் சந்த் (ஓய்வு) ஆகியோரும் இந்த குழுவில் கலந்துகொண்டனர்.
அவர்களின் வருகையை தொடர்ந்து, வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜேபீசீ பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் அவர்களை அன்புடன் வரவேற்றார். இந்திய மற்றும் இலங்கை இராணுவத்தினருக்கு இடையிலான நட்புறவைப் பிரதிபலிக்கும் வகையில், தூதுக்குழுவினருக்கு சிறப்பான விருந்தோம்பல் வழங்கப்பட்டது. 59 காலாட் படைப்பிரிவு அதிகாரிகளின் உணவகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இரவு விருந்தில் கலாசார நிகழ்வுகளுடன் அமைதி, பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பரஸ்பர மரியாதை தொடர்பான கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.