Header

Sri Lanka Army

Defender of the Nation

21st November 2024 07:00:30 Hours

2 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி படையினரால் இரண்டு வீடுகள் நிர்மாணம்

2 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி படையினர், மதவச்சி, லுனுபஹிச்சாவவில் படையணியின் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரி ஒருவருக்கு புதிய வீட்டை நிர்மாணித்தனர். 2 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி கட்டளை அதிகாரியின் வழிகாட்டுதலின் கீழ், மேற்கொள்ளப்பட்ட இத்திட்டத்திற்கு 2 வது (தொ) விஜயபாகு காலாட் படையணியின் ஓய்வுபெற்ற மற்றும் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களினால் நிதியுதவி வழங்கப்பட்டது.

மேலும், மதவச்சி, லிதவெவ பிரதேசத்தில் தேவையுடைய குடும்பம் ஒன்றிற்கு படையினர் வீடொன்றை நிர்மாணித்துள்ளனர். அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த திரு. தர்ஷன குணசேகர அவர்களின் அனுசரணையில் மதவச்சி பிரதேச செயலாளர் திருமதி எம்.சி மளவியாராச்சி அவர்களின் ஒருங்கிணைப்பில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜேபீசீ பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் 2024 நவம்பர் 19 ஆம் திகதி இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் புதிதாகக் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளுக்கான சாவிகளை உத்தியோகபூர்வமாக பயனாளிகளிடம் கையளித்தார்.

இந்நிகழ்வில் 21 வது காலாட் படைப்பிரிவு தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.