21st November 2024 07:51:09 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜேபீசீ பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் 2 வது இயந்திரவியல் காலாட் படையணி மற்றும் 2 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி ஆகியவற்றிற்கு 19 நவம்பர் 2024 அன்று விஜயம் மேற்கொண்டார்.
விஜயம் மேற்கொண்ட ஒவ்வொரு இடத்திலும் சிரேஷ்ட அதிகாரியின் வாகன தொடணிக்கு மரியாதை வழங்கப்பட்டதுடன், கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளினால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்.
பின்னர் கட்டளை அதிகாரிகள் தமது காலாட் படையலகின் பொறுப்புகள், பங்கு, பணி மற்றும் தற்போதைய அர்ப்பணிப்புகள் குறித்து விளக்கினர். விஜயத்தின் முடிவில், வன்னிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி, படையினருக்கு உரையாற்றியதுடன், விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் பாராட்டுக் குறிப்புகளை பதிவிட்டார்.
இந்நிகழ்ச்சியில் 21 வது காலாட் படைப்பிரிவு தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.