Header

Sri Lanka Army

Defender of the Nation

20th November 2024 18:09:09 Hours

பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் இராணுவத் தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் கௌரவ அந்தலிப் இலியாஸ் அவர்கள் 20 நவம்பர் 2024 அன்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

தளபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது, வருகை தந்த உயர்ஸ்தானிகரும் இராணுவத் தளபதியும் பரஸ்பர நலன் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு இருதரப்பு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினர்.

அவர்களது சுமுகமான உரையாடலின் போது இராணுவம் மற்றும் இராணுவ தொடர்புகளைப் பேணுவதன் முக்கியத்துவம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இரு தரப்பினருக்கும் இடையிலான நல்லிணக்கத்தை அடையாளப்படுத்தும் வகையில் நினைவுச் சின்னங்கள் பரிமாற்றிக்கொள்ளப்பட்டதுடன், சந்திப்பு நிறைவுற்றது. இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், உயர் ஸ்தானிகர் அதிதிகள் பதிவேட்டு புத்தகத்தில் கருத்துகளை பதிவிட்டார்.

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகரின் பாதுகாப்புப் இணைப்பாளர் கொமடோர் எம். மொனிருஸ்ஸமான் அவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.