Header

Sri Lanka Army

Defender of the Nation

21st November 2024 07:55:54 Hours

யாழ் தளபதியின், சிறப்புமிக்க சேவையை அங்கீகரித்து கௌரவிப்பு

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம் ஜி டபிள்யூ டபிள்யூ டபிள்யூ எம் சி பிவிக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் யாழ். மற்றும் கிளிநொச்சி மக்களுக்கான சமூக அர்ப்பணிப்பு மற்றும் உன்னத சேவையைப் பாராட்டி 19 நவம்பர் 2023 அன்று யாழ் வலம்புரி ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வின் போது கௌரவிக்கப்பட்டார்.

பௌத்த, இந்து, முஸ்லிம் மற்றும் கத்தோலிக்க மதகுருமார்கள் தலைமையில் சமய வழிபாடுகளுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் தேசிய கீதம் இசைத்தல், மங்கல விளக்கேற்றல் மற்றும் வரவேற்பு உரையுடன் நடன நிகழ்வுகளும் இடம்பெற்றன.

அவரது பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில் சிறப்பாக இயற்றப்பட்ட பாடல் ஒன்றும் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் கலாசார மற்றும் பாரம்பரிய நடனங்கள், பாடல்கள் இடம்பெற்றதுடன், உயரதிகாரிகளின் உரையில் அவர் பிரதேசத்திற்கு ஆற்றிய சேவையை சிறப்பித்துக் காட்டினர். நிகழ்வின் நிறைவாக சிவில், வர்த்தக மற்றும் அரச சமூகத்தினரால் நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் வடமாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன், மத தலைவர்கள், அரச அதிகாரிகள், சிரேஷ்ட இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள், யாழ் மற்றும் கிளிநொச்சி பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.