19th November 2024 11:54:45 Hours
தேசிய பாதுகாப்பு கல்லூரியின் மூன்றாம் குழு மாணவர்களுக்கு 18 நவம்பர் 2024 அன்று கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியின் பட்டதாரி கற்கைகள் பீட கேட்போர் கூடத்தில் பட்டப்படிப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்ய கொன்தா (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ (இரண்டு பார்கள்) ஆர்எஸ்பீ யூஎஸ்பீ எம்எம்எஸ்சீ (மூலோபாய கற்கைகள் – சீனா) எம்எஸ்சீ (பாதுகாப்பு கற்கைகள்) முகாமைத்துவம் எம்எஸ்சீ (பாதுகாப்பு மற்றும் மூலோபாய கற்கைகள்) எப்என்டியூ (சீனா) பீஎஸ்சீ அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வின் போது இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 16 சிரேஷ்ட அதிகாரிகள், இலங்கை கடற்படையிலிருந்து 08 அதிகாரிகள், இலங்கை விமானப்படையிலிருந்து 06 அதிகாரிகள், 03 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் 08 வெளிநாட்டு மாணவர்கள் (இந்தியா 01, பங்களாதேஷ் 01, ஓமான் 01 மற்றும் சவூதி அரேபியா 05) என மொத்தம் 41 மாணவ அதிகாரிகள், தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வு கற்கைகளில் பட்டப்படிப்பு சான்றிதழ்களைப் பெற்றனர்.
தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் வீரமரணம் அடைந்த போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு நிமிட மௌன அஞ்சலியுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. பின்னர் பிரதம விருந்தினரால் தேசிய பாதுகாப்பு கல்லூரி பட்டங்கள் வழங்கப்பட்டன. பின்னர், தேசிய பாதுகாப்பு கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் டிஜிஎஸ் செனரத் யாப்பா (ஓய்வு) ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியு அவர்கள் பட்டதாரிகளின் பதிவை அங்கீகரித்ததுடன் வரவேற்புரை ஆற்றினார்.
பின்னர் பிரதம அதிதி தனது உரையில் பட்டதாரிகளை வாழ்த்தினார். அதனைத் தொடர்ந்து ஆராய்ச்சி இதழ் தொகுதி II வெளியீடு மற்றும் தேசிய பாதுகாப்பு கல்லூரி கட்டளை தளபதியினால் பிரதம அதிதிக்கு நினைவுப் பரிசு வழங்கல் என்பன இடம்பெற்றன.
விழா நிறைவடைவதற்கு முன், பிரதம விருந்தினர் குழு படம் எடுத்துக்கொண்டார்.
இம்மூன்றாம் குழு பட்டமளிப்பு நிகழ்வில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானி, கடற்படைத் தளபதி, விமானப்படை தளபதி, பொலிஸ் மா அதிபர் மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.