16th November 2024 17:50:00 Hours
பலாலி இராணுவத் தள வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அதிகாரிகளுக்கான வார்டு 2024 நவம்பர் 16 ஆம் திகதி யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
ஐந்து படுக்கைகளை உள்ளடக்கிய புதிய அதிகாரிகள் வார்டு யாழ். பாதுகாப்புப் படைகளின் கீழ் பணியாற்றும் அதிகாரிகளுக்கு உயர்தர பராமரிப்பை வழங்குவதற்காக நிர்மாணிக்கப்பட்டதாகும். இந்த திட்டம் இராணுவப் பணியாளர்களுக்கு சுகாதார உட்கட்டமைப்பு மற்றும் சேவைகளை வழங்கும்.
யாழ்.பாதுகாப்பு படை தலைமையக வழங்கல் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜி.எல்.எஸ்.டபிள்யூ லியனகே யூஎஸ்பீ பீஎஸ்சீ, பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.