16th November 2024 23:37:00 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜேபீசீ பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் 16 நவம்பர் 2024 அன்று 59 வது காலாட் படைப்பிரிவு உட்பட அதன் கட்டளைப் படையலகுகளான 5 வது இலங்கை சிங்கப் படையணி, 6 வது கெமுனு ஹேவா படையணி, 6 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி, 12 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் 10 வது இலங்கை சிங்கப் படையணி ஆகியவற்றிற்கு விஜயம் மேற்கொண்டார்.
இந்த விஜயம், செயல்பாட்டுத் தயார்நிலையை மதிப்பிடுவது, மன உறுதியை அதிகரிப்பது மற்றும் அவரது கட்டளையின் கீழ் உள்ள படையலகுகளுக்கிடையில் ஒற்றுமையை வலுப்படுத்துவது ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.
வருகை தந்த வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியின் வாகன தொடரணிக்கு மரியாதை வழங்கப்பட்டதுடன், கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், கனிஷ்ட அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள் ஆகியோரால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். பின்னர் கட்டளை அதிகாரிகளினால், அவர்களின் காலாட் படையலகின் பொறுப்புகள், பங்கு மற்றும் பணி மற்றும் தற்போதைய அர்ப்பணிப்பு குறித்து விளக்கப்பட்டது.
இறுதியாக வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி படையினரைச் சந்தித்து, விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் சில பாராட்டுக் குறிப்புகளை எழுதியதுடன் அன்றைய நிகழ்வுகள் நிறைவுற்றன.
59 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டி.ஆர்.என். ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ, 59 வது காலாட் படைப்பிரிவின் பிரதித் தளபதி, வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி, வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் விடுதி, 591, 592 மற்றும் 593 வது பிரிகேட் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.