16th November 2024 19:14:01 Hours
மின்னேரியா காலாட்படை பயிற்சி நிலையத்தில் 29 அதிகாரிகளுக்கான படையலகு ஆயுத உதவி பாடநெறி எண். 87 (2024/II), 2024 ஓகஸ்ட் 01 முதல் 2024 நவம்பர் 14 வரை நடைபெற்று சான்றிதழ்கள் வழங்கும் விழாவுடன் நிறைவடைந்தது.
2024 நவம்பர் 14 ஆம் திகதி நடைபெற்ற சான்றிதழ் மற்றும் சின்னங்கள் வழங்கும் நிகழ்வில் மின்னேரியா காலாட்படை பயிற்சி நிலையத்தின் பதில் கட்டளை அதிகாரி கேணல் டி. சூரியராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் கலந்து கொண்டார்.
இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் 29 அதிகாரிகளின் பங்கேற்புடன் இந்த பாடநெறி நடைபெற்றது. பாடநெறியின் சிறந்த மாணவருக்கான விருதை விஜயபாகு காலாட் படையணியின் கெப்டன் டபிள்யூ.சி.ஆர். குமார அவர்கள் பெற்றுக்கொண்டார்.
பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்குவதற்கு முன்னர் பிரதம விருந்தினர் நிறைவுரை ஆற்றினார். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.