Header

Sri Lanka Army

Defender of the Nation

16th November 2024 19:00:56 Hours

பூநகரின் தீர்க்கமான போரின் 31வது ஆண்டு நிறைவு

பூநகரின் தீர்க்கமான போரின் போது உயிரிழந்த, காணாமற்போன மற்றும் காயமடைந்த போர்வீரர்களின் 31வது வருட நினைவு கூறல் 2024 நவம்பர் 11 ஆம் திகதி தொடர் நிகழ்வுகளுடன் கொண்டாடப்பட்டது.

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியும் கஜபா படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்ஜிடப்ளியுடப்ளியுடப்ளியுஎம்சீபி விக்கிரமசிங்க ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் இந்த நினைவு நிகழ்வுகள் நடாத்தப்பட்டன.

ஆண்டு நிறைவை ஒட்டி, 55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்கேஎன்சி ஜயவர்தன ஆர்எஸ்பீ என்டிசி அவர்களின் மேற்பார்வையின் கீழ், 552 வது காலாட் பிரிகேடினால் மத மற்றும் தொண்டு நிகழ்வுகள் நடாத்தப்பட்டன.

மேலும், புத்தூர் புனித லூக்கா மெதடிஸ் முதியோர் இல்லத்தில் 19 முதியவர்கள் மற்றும் 14 பணியாளர்களுக்கு அடிப்படைத் தேவைகள் மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்வை கஜபா படையணி ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.