Header

Sri Lanka Army

Defender of the Nation

14th November 2024 12:51:56 Hours

10 வது கஜபா படையணியினரால் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு

11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேஎயூ கொடிதுவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 10 வது கஜபா படையணி படையினரால் கண்டி, பன்விலவில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்திற்கு புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டது.

இந்த வீடமைப்புத் திட்டமானது சுதுஹும்பொல ரஜமஹா விகாரையின் விகாராதிபதி ஹங்குரன்கெத்த தம்மரக்கித மகா தேரர், தலதா மாளிகையின் தியவதன நிலமே மற்றும் விஷ்ணு தேவாலய பஸ்நாயக்க நிலமே தேரர் ஆகியோரிடமிருந்து முழு நிதியுதவி கிடைக்கப்பெற்றது.

10 வது கஜபா படையணின் கட்டளை அதிகாரி மேஜர் என்கே வீரதுங்க அவர்களின் மேற்பார்வையின் கீழ் 10 வது கஜபா படையணி படையினரால் வழங்கப்பட்ட பணியாளர் உதவியுடன் 24 ஜூன் 2024 அன்று வீட்டின் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்களால் 11 நவம்பர் 2024 அன்று பயனாளிக்கு வீடு அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பிரதேச மக்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.