Header

Sri Lanka Army

Defender of the Nation

15th November 2024 17:15:58 Hours

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக வழங்கல் தளபதி 1வது பொறியியல் சேவைகள் படையணிக்கு விஜயம்

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக வழங்கல் தளபதி பிரிகேடியர் எச்எம்எஸ்ஐ செனரத் அவர்கள் 12 நவம்பர் 2024 அன்று 1வது பொறியியல் சேவைகள் படையணிக்கு விஜயம் மேற்கொண்டார்.

அவரது வாகன தொடரணிக்கு மரியாதை வழங்கப்பட்டதை, தொடர்ந்து கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் பீஏஏஎஸ் பெரேரா அவர்களால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்.

படையணியின் பணிகள், கடமைகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானத் திட்டங்கள் தொடர்பான விரிவான விளக்கத்திற்குப் பிறகு, வருகை தந்த சிரேஷ்ட அதிகாரி குழுப் படம் எடுத்து கொண்டு முகாம் வளாகத்தை பார்வையிட்டார். படையினருக்கு உரையாற்றிய அவர், இராணுவ ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தவிர்த்தல், சமூக ஊடகங்களை பொறுப்புடன் பயன்படுத்துதல் மற்றும் இராணுவ வீரர்களாக நிபுணத்துவத்தை பேணுதல் தொடர்பாக கருத்து தெரிவித்தார்.

இந்த விஜயத்தில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.