Header

Sri Lanka Army

Defender of the Nation

13th November 2024 15:56:43 Hours

முல்லைத்தீவு, கொக்கிளாய் ஸ்ரீ சம்போதி விகாரையில் சம்பிரதாய கட்டின பூஜை

59 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் டிஆர்என் ஹெட்டியாரச்சி ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ மற்றும் 591 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எம்ஜே உபேசேகர ஆர்எஸ்பீ பீஎஸ்சி ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் முல்லைத்தீவு, கொக்கிளாய் ஸ்ரீ சம்போதி விகாரையில் சம்பிரதாய கட்டின பூஜை 2024 நவம்பர் 09 மற்றும் 10ம் திகதிகளில் நடைப்பெற்றது.

வண. திஸ்ஸபுர குணரதன தேரர் இந்த சமய நிகழ்வுகளை நடத்தினார். 591 வது காலாட் பிரிகேட், 12 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் 10 வது இலங்கை சிங்க படையணி படையினர் வருடாந்த கட்டின பூஜை நிகழ்வை ஏற்பாடு செய்வதற்கு உதவிகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சுமார் 200 பக்தர்கள் கலந்து கொண்டனர்.