13th November 2024 16:08:38 Hours
மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் இலங்கை பொறியியல் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை பொறியியல் படையணி தனது 73 வது ஆண்டு நிறைவு விழாவை 2024 நவம்பர் 09 அன்று படையணி தலைமையகத்தில் கொண்டாடியது.
2024 நவம்பர் 06 அன்று படையணி தலைமையக போர் வீரர்களின் நினைவு தூபியில் வீரமரணமடைந்த போர் வீரர்களின் நினைவேந்தலுடன் ஆண்டு நிறைவு விழா ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து, படையினர் இரவு முழுவதும் பிரித் பாராயண நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். மறுநாள் காலை, சிப்பாய்கள் உணவகத்தில் மகா சங்கத்தினருக்கு ‘ஹீல் தானம்’ (காலை உணவு) மற்றும் பிரிகர வழங்கப்பட்டது.
2024 நவம்பர் 09 அன்று வருகை தந்த படையணியின் படைத் தளபதியை பிரதான நுழைவாயிலில் பதில் நிலைய தளபதி மரியாதையுடன் வரவேற்றார். பின்னர் அவருக்கு சம்பிரதாயபூர்வ பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. வீரமரணமடைந்தவர்களின் நினைவாக போர் வீரர் நினைவு தூபியில் மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர், படையணியின் படைத் தளபதி அணிவகுப்பு மைதானத்திற்கு அணிவகுப்பு மரியாதையை பெற்றுக்கொள்வதற்கு அழைக்கப்பட்டார். இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து, படையணியின் படைத் தளபதி அனைத்து நிலையினருக்குமான மதிய உணவில் கலந்து கொண்டார்.
ஆண்டு நிறைவு விழாவில் இலங்கை பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுரங்கி அமரபால அவர்களின் வழிகாட்டலின் கீழ், படையணியில் 30 வருடங்களாக விசுவாசமாக அர்ப்பணிப்புள்ள சேவையை வழங்கிய சிவில் ஊழியர் திரு என்எல்டிஎஸ்ஆர் கருணாரத்ன அவர்களுக்கு நிதி நன்கொடை வழங்கப்பட்டது. இவர் தற்போது விசேட வைத்திய சிகிச்சைக்காக தொடர்ந்தும் மருந்துகள் தேவையுடைய சுகாதார சவால்களை எதிர்கொண்டுள்ளார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.