13th November 2024 15:47:07 Hours
அண்மையில் நடைபெற்ற நெக்ஸ்ட் ஜென் ஹொக்கி சாம்பியன்ஷிப் 2024 தொடரில் வெற்றி பெற்ற இலங்கை இராணுவ ஹொக்கி அணியின் வெற்றியை கௌரவிக்கும் வகையில் 20 நவம்பர் 2024 அன்று இராணுவத் தலைமையக தளபதி அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டது.
2024 நவம்பர் 09 ஆம் திகதி கொழும்பு ஹொக்கி மைதானத்தில் இடம்பெற்ற நெக்ஸ்ட் ஜென் ஹொக்கி சாம்பியன்ஷிப் 2024 இல் வெற்றி பெற்று இலங்கை இராணுவத்திற்கு பெருமை சேர்த்த வீரர்களின் சிறப்பான ஆட்டத்திற்காக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார். நிகழ்வின் போது, அவர் ஒவ்வொரு உறுப்பினருடனும் தனிப்பட்ட முறையில் உரையாடியதுடன், அவர்களின் அர்ப்பணிப்பை பாராட்டினார்.
இராணுவத் தளபதி அவர்கள், பாராட்டு முகமாக அணிக்கு நிதி ஊக்கத்தொகையாக 575,000. ரூபாவும், அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
இராணுவ விளையாட்டு பணிப்பாளரும் அணி முகாமையாளருமான பிரிகேடியர் எல்.கே.டி. பெர்னாண்டோ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ மற்றும் அணியின் பயிற்றுவிப்பாளர் திரு. எம்ஜிஎம் ரிபாஸ் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அதனை தொடர்ந்து, இராணுவ பதவி நிலை பிரதானியினை சந்தித்து அவர்களின் சாதனைக்கு பாராட்டுகளை பெற்றுக் கொண்டனர்.